இலங்கையில் சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு!

0 27


நாட்டில் அதிகரித்து செல்லும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்திற்கு எதிராக 22.07.21 இன்று முல்லைத்தீவு  மாவட்டசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.


சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம் போன் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினை சேர்ந்த பெண்கள்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.