மக்களுக்கான சேவையினை சரியாக வழங்கமுடியாத எரிபொருள் நிரப்ப நிலையம்!

0 226


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் மக்களுக்கான எரிபொருள் சேவையினை சரியாக வழங்குவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவ்வப்போது எரிபொருட்கள் தீர்ந்து விடுவதால் விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகிவருகின்றார்கள்.


அதிகளவான விவசாயிகள் வாழும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடையிடை பொற்றோல்,அல்லது டிசல் தீர்ந்து விடுவதால் அங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் நுகர்வோரை ஒட்டுசுட்டான் நகரில் உள்ள கடை ஒன்றின் பெயரை கூறி அங்கு எரிபொருள் இருக்கும் அடித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவருகின்றார்கள்.

ஒட்டுசுட்டானில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள புதுக்குடியிருப்பு,முள்ளியவளை,நெடுங்கேணி பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவ்வாறு இல்லாவிடின் அதிக விலை கொடுத்து தனியாரிடம் எரிபொருளை வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


வயல் வேலை தொடங்கும் காலத்தில் இவ்வாறான நிலையினால் உழவு இயந்திர பாவனையாளர்கள் டீசலுக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.