குளத்தில் நீரினை திறந்துவிட்டு மீன்பிடிக்கவே இதுவரை காலமும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது!

0 168

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கமநல சேவைப்பிரிவிற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை குளத்தில் மீன்பிடிப்பதற்கு குத்தகை தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் குளத்தில் தண்ணீர் வீண் விரையமாக்கப்படுவதால் கால்நடைகளுக்கு தண்ணீர்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.


இது குறித்து முள்ளியவளை கமநல சேவை நிலைய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இதுவரை காலமும் குளத்து நீரினை திறந்து விட்டு மீன்பிடிக்கவே குத்தகைக்கு வழங்கிவருகின்றோம் இதனால் பிரச்சினை என்று எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


காஞ்சிரமோட்டை குளத்தின் கமக்கார அமைப்பின் தலைவர் து.காந்தன் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிரமோட்டை குளத்தில் சிறுபோக நெற்செய்கை அறுவடையின் பின்னர் குளத்தினை அரசவருமானத்திற்காக மீன்பிடிப்பதற்கு குத்தகைக்கு கொடுப்பது வழமை விவசாய அமைப்புக்களின் தீர்மானமும் இதுதான்.


குளங்கள் மீன்பிடிக்க குத்தகைக்கு விடுவதற்கு நீர்பாசன செயலாளர் தான் பொறுப்பு கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை என்று சொல்லமுடியாது இந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் உள்ளன.


குளத்தின் கொட்டிற்கு மேல் அரை அடி தண்ணீர் விட்டுத்தான் மீன்பிடி நடவடிக்கைக்காக குளத்தினை திறப்பது வழமை காஞ்சிரமோட்டை,நீராவிகுளம்,பெரியபுளியங்குளத்தில் தலா பத்தாயிரம் மீன்குஞ்சுகளை பணம் கட்டி விட்டுள்ளோம் இதற்கான வருமானத்தினை பெற்றுக்கொள்ளவேண்டும்


குளத்தின் கீழ் விவசாய செய்கை அறுவடையானதை தொடர்ந்து நன்னீர் மீன்பிடியாளர்களின் மீன்பிடிக்காக குளத்தின் கொட்டினை திறந்துவிடுவது வழமை என்றும் காஞ்சிரமோட்டைகுளத்தின் கமக்கார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.