தேசிய வீடமைப்ப அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா!

0 25


முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந் சி;ல்வாவினை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்


பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வா மரதண்டனை கைதியாக உயர் நீதிமன்றத்தினால் தீர்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்
கடந்த மாதம் ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இவரது விடுதலை குறித்து தென்னிலங்கை அரசியலில் பல்வேறு சர்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் சிறைகளில் வைத்திருப்பது தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகளும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் இலங்கை ஜனாதிபதியின் செயலாளரால் துமிந்த சில்வாவினை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமித்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி அறிக்கையிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.