முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிற்கு போராடும் யானை-களத்தில் மருத்துவர்கள்!

0 177

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.


16.07.21முல்லைத்தீவு ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிரிற்காக போராடிவருகின்றது.


விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.


பெண் யானைஒன்று உணவு உட்கொள்ளமுடியாத நிலையில் குறித்த பகுதியில் அலைந்து திரிந்த நிலையில் நடக்க முடியாத நிலையில் வயல் நிலத்தில் வீழ்ந்துள்ளது.


இதுகுறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து யானைக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.