புதுக்குடியிருப்பில் 5 பேருக்கு கொரோனா!

0 179

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பலரின் பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


யாழ் போதனா வைத்தியசாலையின் இன்றைய முடிவுகளின் படி புதுக்குடியிருப்பு சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து அவர்களை கொரோனா மருத்துவமனை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் சுகாதார வைத்திய அதிகாரி பரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.