முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

0 315

முல்லைத்தீவில் போலீசார் மற்றும் விமானப் படையினர் மற்றும் ராணுவத்தினர் ஆகியோர் சில பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கேப்பாபிலவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் அவர்களை கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபிலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து

முல்லைத்தீவு நகரில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேப்பாபிலவு விமானப்படை தளத்துக்கு முன்னாள் பொலிசார் விமானப்படையினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.