எங்களை விடுவிக்க இல்லாவிடின் பாரிய செயற்பாட்டிற்கு நாங்கள் போவோம்-ஜோசப் ஸ்டாலின்!

0 49

கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபிலவில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து கொண்டு தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றார்கள்.


14.07.21 இன்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள்.


இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டிற்கு போகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்த அரசு சுகாதார வழிமுறைகளை பாவித்து மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடு இதனை நிறுத்த வேண்டும் அரசாங்கம் என்னசெய்கின்றது என்று நாங்கள் பார்த்து தீர்மானம் எடுப்போம் இந்த நாட்டில் மக்கள் எங்களுக்காக போராடுகின்றார்கள்.
மக்களுடன் நாங்கள் இணைந்து இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரத்தை வெல்வதற்காக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.