அரசியல் கைதி ஒருவரின் வழக்கு விசாரணைக்காக 5 நாட்கள் திகதி அறிவிப்பு!

0 75

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் அவர்களின் மகனான ஆதித்தன் மீது பயங்கரவா தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளுக்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையில் ஜந்து நாட்களுக்கு இந்த விசாரணையினை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களினால் கையாளப்பட்டு வரும் இந்த வழங்கிற்கான விசாரணை குறித்து அரச சாட்சியங்களை மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஸ்ஸதீன் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்தன் 12 ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் கீழ் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியாகும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மீதான வழக்கின் மேலதிக விசாரணைக்கு பல தவணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாட்சிகள் மன்றில் சமூகமளிக்காததாலும் கடந்த ஆண்டில் இருந்து கொவிட் 19 காரணமாக வழக்கு தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் வழக்கிற்கான விசாரணைக்காக திகதியிடும்படி ஜனாதிபதி சட்டத்தரணி மன்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அரச சாட்சிகளுக்கு அறிவித்தல் அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிட்டு மேலதி விசாரணைகளை எதிர்வரும் 19,22,26,27,28 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.