மாங்குளத்தில் காணமல் போன மாணவன் கண்டுபிடிப்பு!

0 388


மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் 14 வயது மாங்குளம் மகா வித்தியாலய மாணவன் கடந்த 10.07.21இரவு முதல் காணாமல் பேயுள்ளார் இவர் 11.07.21 அன்று வீடு திரும்பியுள்ளார்.


இதுகுறித்து மாணவன் கருத்து தெரிவிக்கையில் தான் குளிக்க சென்றவேளை யாரோ தன்னை கூப்பிட்டது போல கிடந்தது நான் காட்டிற்குள் சென்று விட்டேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது அதன் பின்னர் கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது என்றும் மாணவன் தெரிவித்துள்ளான்.


மாங்குளம் பொலீசாரின் வாய்முறைப்பாட்டின் பின்னர் குறித்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளான்.குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.