புதுக்குடியிருப்பில் குடுவுடன் மூவர் கைது!

0 246


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குடு போதைப்பொருளுடன் மூவரை 06.07.21 அன்று மாலை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.


இவர்களிடம் இருந்து 8 கிராம் குடு மீட்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் கைவேலி,கோம்பாவில்,யாழ்ப்பணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைதுசெய்யப்பட்ட நபர்கள் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தடுத்துவைத்து விசாரணைசெய்யப்படுவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.