பசிலை உள்ளே நுளைக்க ஒருவர் வெளியேறினார்!

0 25

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


இவர் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீPலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷவினால் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 08ஆம் திகதி பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டியுள்ள நிலையில், அவருக்கான வெற்றிடத்தை ஏற்படுத்தவே மேற்படி எம்.பி பதவியை கெட்டகொட இராஜினாமா செய்துள்ளார்.


இவருக்கு வெளிநாட்டு தூதரகத்தின் உயர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனிவரப்போகும் காலங்களில் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு பிரவேசமும் இலங்கை அரசியலின் செயற்பாடுமே பேசுபொருளாக காணப்படும்.

Leave A Reply

Your email address will not be published.