ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை!

0 159

நாட்டில் கொரோனா  வைரஸ் இனுடைய தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதோடு காலத்திற்கு ஏற்ற வகையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடிய வகையிலும் சிறந்த விவசாய செய்களை முன்னெடுப்பது தொடர்பில் விவசாயத் திணைக்களம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

அந்த வகையிலே  காலத்திற்கு காலம் பல்வேறு புதிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்கள் உடனான விவசாய செய்கைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்ற விவசாய திணைக்களத்தின் மற்றுமொரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் பாதுகாக்கப்பட்ட இல்லத்தில் உண்டான கறிமிளகாய் செய்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதனை கற்பிக்கும் முகமாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடைய அறுவடையும்  நடைபெற்றுள்ளது

எனவே இவ்வாறான பயிர்களை சிறந்த முறையில் விலை கூடிய நேரங்களில் செய்கை பண்ணக்கூடிய விதத்தினை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தக் காலப்பகுதி கறிமிளகாய் செய்கைக்கு உகந்த காலப் பகுதியாக இல்லாத போதும் அதனை சிறந்த முறையில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும் கிருமி நாசினிகளை பயன்படுத்தாது இயற்கை உரத்தினை பாவித்து  அதிக வருமானமீட்டக்கூடிய   இந்த செய்கை முறையை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற   முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டு அதனுடைய அறுபடை வைபவமும் இடம்பெற்றிருக்கின்றது

இந்த அறுவடை வைபவத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,ஊழியர்கள் மாகாண விவசாய பணிப்பாளர் ,ஊழியர்கள் உதவி விவசாய பணிப்பாளர் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

எனவே இவ்வாறான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த முயற்சிகளின் ஊடாக விவசாயிகள் முன்னுதாரணமாக செயற்படுவதற்கான விளக்கங்களையும் இந்த கறிமிளகாய் செய்கை  தொடர்பாக பண்ணை முகாமையாளர் கீர்த்தியின்   தெளிவுபடுத்தினார்

Leave A Reply

Your email address will not be published.