உடுத்துறை கிராமத்தில் 30 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

0 54

நாட்டில் ஏற்றபட்டுள்ள தொழில் முடக்கத்தினால் குடும்ப வருமானத்தினை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் அரச சார்பற்ற நிறவனங்கள் இணைந்து உலர் உணவு பொதிகளை வழங்கி வருகின்றார்கள்.


அந்த வகையில் யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கிராமத்தில் வசித்துவரும் பெண்தலைமைத்துவ குடும்பத்தினை சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் என 30 குடும்பங்களுக்கு வன்னியின் கண்ணீர் அமைப்பு ஊடாக உலர் உணவு பொதிக்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.(29.06.21)


அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வசித்துவரும் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் தலா 2300ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.


கடந்த வாரம் இதே கிராமத்தினை சேர்ந்த 90 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனை பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுத்திறனாளிகள் என 30 பேரின் விபரங்கள் கிராம சேவையாளரால் அனுப்பிவைக்கப்பட்டதற்கு இணங்க இந்த நிவாரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.