புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றல்!

0 1,051

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமையப்பெற்ற ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இரண்டாவது நாளாக (25.06.21) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் இரண்டு நாட்கள் 900 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
முப்படையினரை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.


அந்த வகையில் ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும்பெண்கள், ஆண்கள் மற்றும் வாகன சாரதிகள் , சிற்றூழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி ஏற்றூம் நடவடிக்கை இடம்பெற்று
வருகின்றது. நேற்றைய தினம் 582 பேருக்கும் இன்றைய தினம் 318 பேருக்குமாக 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஆடைத்தொழில்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக ஏற்றப்பட்டுள்ளதுடன் விரும்பம் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.