சிறையில் நீண்டகாலம் உள்ள முன்னால் போராளிகளுக்கு பொது மன்னிப்பா?

0 66

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு முன்னால் விடுதலைப்புலிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்ப வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கொள்காட்டி இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 17 முன்னால் விடுதலைப்புலிகள் போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் நீண்டகாலம் உள்ளவர்கள் அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டனைக்காலத்தை விட அவர்கள் நீண்டகாலம் சிறையில் உள்ளமைக்கு அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.