திம்பிலியில் குளக்காணி பிடித்தவர்கள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்மந்தமா?

0 103

புதுக்குடியிருப்பபு கோம்பாவில் திம்பிலி குளத்தில் அரச காணி அபரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று கிராம சேவையாளர் தனது கிராமத்தில் அரசகாணி காடழிப்பு ,மணல் அகழ்வு தொடர்பில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்னிலையில் இன்று 21.06.21 அன்று திம்பிலி குளத்திற்கு சொந்தகாரரான கமநலசேவைத்திணைக்கள அதிகாரிகள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள் அங்கு பொலீசார் முறைப்பாடாக ஏற்றுக்கொள்ளாமல் பதிவு கொப்பியில் பதிவு செய்துவிட்டு இது தொடர்பில் மேலதிக தகவல் இருந்தால் தமக்கு தருமாறு பணித்துள்ளார்கள்.


இதன் பிண்ணயில் புதுக்குடியிருப்பின் பாரிய முக்கிய அரச உத்தியோகத்தர்கள்,படித்தவர்கள் செல்வம் படைத்தவர்கள் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது காணி தள்ளியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான உண்மையினை கண்டறியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.