யாழில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

0 25

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசன எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி,யாழ்ப்பாணம் இரண்டு மாவட்டங்களையும் உள்ளடக்கிய தேர்தல் தொகுதியாக யாழ் தேர்தல் தொகுதி காணப்படுகின்றது.


2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பின் பெயர் பட்டியலுக்கு அமைய இந்த குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


2020 வாக்காளர் பட்டியலில் மக்கள் தம்மை இணைத்துக்கொள்வதில் காட்டிய அக்கறையீனம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பதிவது தொடர்பில் விழ்ப்பூடாமை என்பனவே காரணமாக தெரிவித்துள்ள அவர்

யாழ்.மாவட்டத்தில் இழக்கப்பட்ட உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18 இல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 9 நாடாளுமன்ற ஆசனங்களாக இருந்து 2014 ஆம் ஆண்டு 7 ஆசனங்களாக குறைப்பட்டு 2020 ஆம் ஆண்டு 6 ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.