மூன்று கரையோர கிராமங்களில் மது விற்பனை-பாவனை-மக்கள் அசௌகரியம்!

1 2,475

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட வலைஞர்மடம்,அம்பலவன் பொக்கணை,புதுமாத்தளன் கிராமங்களில் தொடர்ச்சியாக மது விற்பனையாகி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளபோது மதுபான சாலைகள் பூட்டப்பட்டுள்ள போதும் குறிப்பிட்ட மூன்று கிராமங்களிலும் மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.
மதுபான கடைகளில் விற்பனையாகும் மதுபானங்கள ; மற்றும் கசிப்பு,கஞ்சான என்பன நாள்தோறும் விற்பனையாகிவருகின்றன.

இதனால் இளம்சமூகம் பாதிக்கப்படுவதுடன் வருமானம் அற்ற நிலையில் உள்ள குடும்பங்களில் மேலும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து சம்மந்தப்பட்ட திணைக்களங்கள்,அதிகாரிகள்,பொலீசார்,மக்கள் அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

1 Comment
  1. Dayan says

    Ethuku precedent lock down eddutha ok …..
    Elladie ethu eppdie athiekam poeiedum
    Apuram sappiedama cella family seathuveda pokkthu

Leave A Reply

Your email address will not be published.