வலய கல்விப்பணிப்பாளர் அற்ற நிலையில் முல்லை கல்வி வலயம்!

0 346

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயம் வலயக்கல்விப்பணிப்பாளர் அற்ற நிலையில் கடந்த ஒருமாதகாலமாக காணப்படுகின்றது.


முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்று சென்று ஒரு மாதம் கடந்த நிலையிலும், இதுவரை புதிய கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை .


தற்போது, பயணக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், பாடசாலைகள் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு இணையத்தின் ஊடாக கல்வி நடவடிக்கையினை முன்னெடுக்வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையிலும்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இணைய கல்வியினை செற்ப அளவிலான மாணவர்களே பயனடைந்துவருகின்றார்கள்.

வெளிமாவட்டங்களை சேர்ந்த பல ஆசிரியர்களே முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றி வருகின்றார்கள் தற்போது பயணத்தடை முடக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆசிரியர்கள் வீடுகளில் இருந்து (ZOOM)இணையம் ஊடாக மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் சில ஆசிரியர்கள்zoom ஊடாக மாணவர்களிடம் கல்வி கற்று பணம் பெற்று வருகின்றார்கள் பலர் இலவசமாக கற்பித்துவருகின்றார்கள் இவ்வாறான நிலையில் கிராமங்களில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.


கிராமங்களில் பல ஆசிரியர்கள் தொலைபேசி ஊடாக மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு வினாக்கொத்களை கொடுத்துவருகின்றார்கள் ஆசிரியர்களின் சேவையினையும் நடவடிக்கையினையும் சரியாக கண்காணிக்கவேண்டும் மாணவர்களின் தொடர்பாடல் சரியாக பேணப்படுகின்றதாக என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறு கற்றல் செயற்பாடுகளில் வலயக் கல்வி பணிமனையால் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் அதிகம் காணப்படுகின்றது.


போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கொண்டுள்ள ஒரு வலயத்தின் தேவைகளை நிறைவு செய்கின்ற பொறுப்பு வலயக் கல்வி பணிமனையிடம் காணப்படுகின்றது.

எனNவு முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குப் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு, வடமாகாணக் கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்பிரதிநிதிகள்,கல்வி சமூகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.