முத்தையன் கட்டில் மக்களின் கோரிக்கை-வீதிகளை செப்பனிடும் இராணுவம்!

0 117

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  முத்துஐயன்கட்டு கிராமத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த  உள்ளக வீதிகள்  இராணுவத்தினால் கிராம மக்களுடன் இணைந்து தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  முத்துஐயன்கட்டு கிராமத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த சுமார் பத்து கிலோமீற்றருக்கும் அதிகமான  உள்ளக வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் குறித்த வீதிகளை தாற்காலிகமாகவேனும் புனரமைத்து தருமாறு கிராம மக்கள் இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கமைவாக இன்று குறித்த உள்ளக வீதிகள்  இராணுவத்தினால் கிராம மக்களுடன் இணைந்து தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கடத்தலை தளபதி மேஜர் ஜென்ரல்  உபாலி ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலில் குறித்த உள்ளக வீதிகள்  இராணுவத்தினால் கிராம மக்களுடன் இணைந்து தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இராணுவத்தினரின் கனரக இயந்திரங்களை பாவித்து இராணுவத்தினரின் 4 உழவு இயந்திரங்களும் பொதுமக்களின் 10 உழவு இயந்திரங்களையும் பயன்படுத்தி குறித்த உள்ளக வீதிகள்   புனரமைக்கும் பணிகள் இடம்பெறுகிறது

குறித்த இந்த வீதி புணரமைப்பு பணிகளில் இன்று 64 படைப்பிரிவின் இராணுவ பொறுப்பதிகாரி 643 ஆவது பிரிகேட் இராணுவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் வருகைதந்து இன்று வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்

முத்துஐயன்கட்டு கிராமத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த சுமார் பத்து கிலோமீற்றருக்கும் அதிகமான  உள்ளக வீதிகள் இவ்வாறு தற்காலிகமாக புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.