நாயாற்றில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை மீனவர் ஒருவர் கைது!

0 65

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


இதன்போது நாயாற்று கடற்பரப்பில் ஒளிபாச்சி மீன்பிடித்த படகு ஒன்றினையும் அதில் இருந்த மீனவரையும் கைதுசெய்துள்ளார்கள்.


கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்தல் சட்டத்திற்கு முரணான தொழில் நடவடிக்கையாகும்.
இன்னிலையில் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த மீனவர் ஒருவர் நாயாற்று கடல்பகுதியில் ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இவர் மீது வழக்கு பதிவு செய்த கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.