பச்சைபுல்மோட்டையில் உயிரிழந்தவர் கொலைஎன்ற கோணத்தில் விசாரணை!

0 458

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று 09.06.21 இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று மாலை பச்சைப்புல்மோட்டை பகுதியில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவரது உயிரிழப்பு குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணவிசாரணை அதிகாரிகள்,தடையவியல் பொலீசார் ஆகியோர் உடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன் இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறு பணித்துள்ளார்.


குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே உடலமாக காணப்பட்டுள்ளார் இவரது உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.


உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது அங்கு மரணவிசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.