ஆனந்தபுரத்தில் இருந்து நந்திக்கடல் சென்றவர் உடலமாக மீட்பு!

0 2,841

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று 09.06.21 இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் இன்று மாலை பச்சைப்புல்மோட்டை வயல்பகுதியில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உந்துருளியில் பயணித்த இவர் உந்துருளியுடன் உடலமாக காணப்பட்டுள்ளார்.
ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன் இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.