மீன் பெட்டிக்குள் கஞ்சா கொண்டு சென்றவர் வசமாக மாட்டினார்!

0 206

வடக்கில் இருந்து மீன் ஏற்றுமதியாளர்கள் போல் மீன் பெட்டிக்குள் கஞ்சா கொண்டுசென்ற சம்பவம் ஒன்று ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.


யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி மீன்வர்த்தகத்தில் ஈடுபடும் வாகனம் ஒன்று ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து பொலீசாரின் சோதனையின் போது கஞ்சா கடத்தியமை தெரியவந்துள்ளது.


குறித்த மீன் ஏற்றும் வாகனத்தில் 4கிலோ 200 கிராம் கஞ்சா மறைத்துக்கொண்டு சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இது குறித்தான விசாரணையினை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.