ஆயர் இல்ல காணியில் மணல் குவிப்பு பாதிரியார் கைது செய்யப்படுவாரா?

0 236

முல்லைத்தீவு உப்பமாவெளி பகுதியில் யாழ் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் சட்டத்திற்கு முரணாக மணல் குவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாரால் நேற்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு இலக்கம் B-841 இதன் படி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், மணல் அகழ்வுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, உப்புமாவெளி மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்றைய தினம் கணியவளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். 

இதன்போது, குறித்த மணல் அகழ்வுக்கான அனுமதி பெறப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரிவித்த அதிகாரிகள், யாழ்ப்பாணம் சென்று, இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்

ஆனால் இதுவரை எவரும் முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.