தொடரும் சீரற்ற வானிலையால் 10 பேர் உயிரிழப்பு!

0 35

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


தொடரும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பத்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன 10 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


நுவரேலியா,இரத்தினபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 54 ஆயிரத்தி 123 குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்தி 19ஆயிரத்தி 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


15ஆயிரத்தி 499 பேர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
கடும் மழைவெள்ளம்,மற்றம் மண்சரிவு காரணமாக 724 வீடுகள் பகுதியளவிலும் 11 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன பாதிப்பு குறித்தான விபரங்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகள் வழங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.


அதிகளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் முப்படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.