ஆடைத்தொழில்சாலை நடவடிக்கையினை கட்டுப்படுத்த பிரதேச சபை உறுப்பினர் எம்.விக்னா கோரிக்கை!

0 364

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழில்சாலை நாளை 07.06.21 திறக்கவுள்ளதாக பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.


கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் எம்.விக்னா அவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆடைத் தொழில்சாலை மூலமே நோயாளர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றார்கள் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டிய அதிகாரிகள் தவறு செய்துவிட்டார்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு செயற்படுத்துமாறு கோரியுள்ளார்.


ஆடைத்தொழில்சாலை திறக்கலாம் என்றால் வணிக நிலையங்களும் திறக்கலாம் நாளாந்தம் கூலி வேலைசெய்பவர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதில் கூடிய கவனம் செலுத்தி ஆடைத்தொழில் சாலையினை திறக்க அனுமதிக்காது நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.