முல்லைத்தீவிலும் 5000 ரூபா வழங்கும் பணிகள் ஆரம்பம்!

0 172

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பயண  கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு  இருக்கின்ற நிலைமையில் நாளாந்த செலவுகளுக்கு மக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர்

இந்நிலையில் அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாடளாவிய ரீதியில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள   நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 34146 குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

அந்தவகையில் ஆரம்ப நிகழ்வாக முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள்  சமூர்த்தி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி ஜெயபவானி முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மக்களின் வீடுகளுக்கு சென்று  கொடுப்பனவுகளை வழங்கி  இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்

இந்த கொடுப்பனவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கொடுப்பனவுகள் மொத்தமாக 34146 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.