தடுப்பூசியை பெற தெற்கில் முண்டியடிக்கும் மக்கள்-யாழில் பின்னடிக்கும் மக்கள்!

0 57

அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்றப்படும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்காக தெற்கில் மக்கள் முண்டியடிக்கும் நிலையில் யாழில் பின்னடிக்கும் நிலை காணப்படுவதாக புள்ளிவிபரம் ஊடாக தெரியவந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொளவதில் மக்கள்பின்னடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
யாழில் கடந்த திங்கட்கிழமை 6ஆயிரத்தி 72 பேருக்கு சினோ பார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது தெரிவுசெய்யப்பட்ட கிராமஅலுவலகர் பிரிவின் மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாண மக்கள் தொகையின் அடிப்படையில் 11 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான திங்கட்கிழமை 10 ஆயிரத்தி 52 பேருக்கு போட எதிர்பார்த்த போதும் 6ஆயிரத்தி 72 பேர் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.


நேற்று 19 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 13 ஆயிரத்து 892 பேர் இன்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 70.99 சதவீதமானோர் பெற்றுள்ளனர்.கடந்த மூன்று நாள்களில் 22 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றியுள்ளனர்.50% 60% 70% என 3 நாள் சிறப்பான முன்னேற்றம்.

இதேவேளை தடுப்பூசி பெறுவதில் யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்கள் அதீக அக்கறை காட்டிவருகின்றனர். நேற்றும் 964 பேருக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1114 மக்கள் தடுப்பூசி பெற்றிருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.