முல்லைத்தீவில் படையினரின் சோதனையில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்!

0 583

முல்லைத்தீவு சின்னாத்து பாலத்திற்கு அருகில் உள்ள படையினரின் வீதி சோதனை சாவடியில் இளைஞர் ஒருவர் கேரள கஞ்சாவுடன்  கைதுசெய்யப்பட்டுள்ளார்


இச்சம்பவம் 01.06.21 காலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு சின்னாத்து பாலத்திற்கு அருகில் உள்ள படையினரின் வீதி சோதனை சாவடியில் பயணித்த இளைஞர் ஒருவரிடம்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 8 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுப்புக்குளம் முல்லைத்தீவினை சேர்ந்;த 20 அகவையுடைய குறித்த இளைஞனே இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த வீதிகளில் படையினர் பொலீசார் சோதனை நிலையங்களை அமைத்து கண்காணித்துவரும் நிலையில் எதுவித அனுமதியும் இன்றி வீதியால் சென்ற இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கஞ்சா கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு  உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.