முல்லைத்தீவில் கண்டியினை சேர்ந்த வயோதிபர் உயிரிழப்பு!

0 969

முல்லைத்தீவு தண்ணீரூற்று பகதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றிய கண்டியினை சேர்ந்த 54 அகவையுடைய இராமையாக மகாதேவன் என்ற வயோதிபர் உயிரிழந்த நிiலில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


தண்ணீருற்று பகுதியில் முதன்மை வீதியின் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இவர் காவலாளியாக கடமையாற்றிய இவர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவரது உயிரிழப்பு தொடர்பில் சி.சி.ரிவி கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நின்றபோது திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்

இவரது உடலம் பிரேத பரிசோதனைகளுக்கான முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.