மக்களுக்கான குடிதண்ணீர் வழங்கும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

0 155

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில கிராம மக்கள் குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


இன்னிலையில் ஆனந்தபுரம்,மந்துவில் பகுதியில் மக்களுக்கான குடிதண்ணீரை வழங்கும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வறட்சியான காலநிலையே நீடித்து வருகின்றது பல இடங்களில் மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.


இன்னிலையில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பொது சுகாதார விதிமுறைக்கு அமைவாக மக்களுக்கான குடிதண்ணீரை வழங்கும் நடவடிக்கைகள் இரண்டு கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.