புதுக்குடியிருப்பில் தொடச்சியாக தொற்று நீக்கும் நடவடிக்கையில் பிரதேச சபையினர்!

0 125

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பொதுசந்தைகள் மற்றும் பேருந்து தரிப்பிடங்கள் என்பன தொற்றுநீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சந்தை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் உடையார் கட்டுசந்தை மக்கள் கூடும் பொது இடங்கள்,விசுவமடு சந்தை மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட முதன்மை வீதிகளின் அருகில் இருக்கும் வணிக நிலையங்கள் என்பனவற்றுக்கும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று 28.05.21 முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.