முல்லைத்தீவில் மாஸ்கினை கொடுத்தார்கள் புதுக்குடியிருப்பில் விரட்டிஅடித்தார்கள்!

0 7,714


நாட்டில் பயணக்கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மக்கள் கூட்டத்தினை விரட்டி அடிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.


பணத்தினை எடுப்பதற்காக ஏ.ரி.எம் இயந்திரத்திற்கு கூட செல்லமுடியாதாவறு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்திய அவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


கையில் பணம் இல்லை நகர் பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு நகரம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலீசாரிடம் கேட்ட போது புதுக்குடியிருப்பில் 9 கிராமங்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை தவிர்ந்த ஏனைய கிராமங்களுக்கே இந்த பயண தடை நீக்கம் புதுக்குடியிருப்பு நகர்பகுதி ஆபத்தாக காணப்படுகின்றது இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்களாக இருந்தால் பல கொரேனா தொற்றாளர்கள் இன்னும் உருவாக வாய்ப்புள்ளது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.


இதேவேளை முல்லைத்தீவு நகர்பகுதியில் அதிகளவான மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்கள்.


முல்லைத்தீவு நகர் பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட படைத் தளபதியின் ஏற்பாட்டில்​ 59வது படைப்பிரிவினரரால் சுத்தம் செய்யப்பட்டு தொற்று நீக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இன்று பொருட் கொள்வனவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நகர் பகுதியில் கூடிய மக்களிடம் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி உள்ளதுடன் படையினரால் பெருமளவு கவசங்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.