புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மக்களுக்கு அறிவிப்பு!

0 342


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபொருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரிபணிமனையினர் ஈடுபட்டுள்ளார்கள்.


11.05.21 நாள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது இதேவேளை 12.05.21 அன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6பேருக்கு கொவிட் தொற்று உள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கில் மக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பினை புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மேற்கொண்டுவருகின்றார்கள்.


புதுக்குடியிருபு;பு நகர் பகுதியில் உள்ள ஆடைத்தொழில்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றார்கள் இன்னிலையில் அவர்களிடம் கட்டம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.இருந்தும் ஆடைத்தொழில்சாலையால் பாரிய ஆபத்து ஏற்படாலம் ஆடைத்தொழில்சாலையினை உடனடியாக மூடவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தவிர்ப்பு சுகாதாரவிதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்குமாறும்இசந்தைபோன்ற இடங்களில் மக்கள் கூடுவதனையும்இநிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்து இருமல்இதெண்டைவலிஇகாச்சல்இஉடல்வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு மக்களுக்கான அறிப்பினை பிரதேச சுகாhர வைத்திய அதிகாரி பணிமனையினர் விடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.