முல்லைத்தீவில் மேலும் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

0 448

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09.05.21 அன்று கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி மேலும் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


07.05.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவர் பொலீஸ் பிரிவினை சேர்ந்தவரும் மற்றையவர் இராணுவ பிரிவினை சேர்ந்தவருமாவாhர்கள்.
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் தனிமைப்படுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் இவர் மகரகமவில் இருந்து முல்லைத்தீவிற்கு இடம்மாற்றம் பெற்று வந்த நிலையில் இவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை விட சுகயீனம் காராணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தாலும் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.