சில இனவாதிகளின் ஆதங்கங்களை திருப்திப்படுத்தவே றிசாட்டின் கைது-ம.தயானந்தன்!

0 112

சில இனவாதிகளின் ஆதங்கங்களை திருப்திப்படுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட்பதியூதீன் அவர்களை இரவில் அரசு கைதுசெய்துள்ளது என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட்பதீயூதீன் அவர்களின் கைது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
நள்ளிரவு வேளையில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுபினரை எந்த வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நீதிமன்றத்தின் அனுமதி இன்றி மக்கள் பிரதிநிதியை சர்வதிகார போக்குடன் சிறுபான்மை சமூகத்தின் குரலை சர்வதிகாரத்துடன் நசுக்குவதற்கு எடுத்த முற்படியாக கருதுகின்றோம்.
எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாது அவரை கைதுசெய்து பழிவாங்கலாகவே கருதப்படுகின்றது சிறுபான்மை சமூகத்தின் மீது சர்வதிகார செயற்பாடாகவே இனவாதிகளை திருப்திப்படுத்துவதன் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்
கடந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்படாதா சிறுபான்மையின் பாராளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டது சிறுபான்மை சமூகத்தினை அடக்குமுறைக்குள் கொண்டுவந்து சர்வதிகார போக்கு உடையவர்களின் நலன்களை திருப்திப்படுத்த இந்த அரசு மேற்கொண்ட நடடிக்கையானது தங்கள் ஆட்சியினை தக்கவைக்கவே என கருதுகின்றோம்.
இந்த கைதினை கண்டனத்திற்குரிய விடையமாக கருதுகின்றோம் அவர் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் சிறுபான்மை தமிழ்சமூகத்தினை சேர்ந்தவர் எந்த விதவேறுபாடும் இன்றி மூவின மக்களுக்கும் சேவையாற்றுகின்ற சேவகராக பாராளுமன்ற உறுப்பினராக 20 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தவர்.
இவரது குரலை நசுக்குவதற்காக அரசிற்கு ஆதரவளிக்கவில்லை 52 நாள் ஆட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்கு பழிதீர்ப்பதற்காக தமிழ் மக்களின் குரலை நசுக்குவதற்கான கைது நடவடிக்கையாக பார்க்கின்றோம்.
இந்த சர்வதிகாரத்தின் நடவடிக்கைக்கும் பாராபட்சமான நடவடிக்கைக்கும் நீதிமன்றங்கள் நீதி வழங்கவேண்டும்
தமிழ்பேசுகின்ற சமூகத்தின் குரல்களை நசுக்குவதற்கு தலைவர்களின் குரல்களை நசுக்கினால் ஏனையவர்களின் குரல்களையும் நசுக்கலாம் என்ற நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது
சில இனவாதிகளின் ஆதங்கங்களை திருப்திப்படுத்தவே இந்த கைது இடம்பெற்றுள்ளது இந்த ஆணைக்குழுவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பான்மையினரும் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை சிறுபான்மையினர் மீது பழிதீர்க்கும் நடவடிக்கையினை நிறுத்தி நீதியினை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.