புதிய தவிசாளருக்கு முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று சந்தை வியாபாரிகளால் வரவேற்பு!

0 634

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய  தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கமலநாதன் விஜிந்தன்  தெரிவு செய்யப்பட்டார்


இதனை தொடர்ந்து புதிதாக தெரிவுசெய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அவர்களுக்கு முள்ளியவளை மற்றும் தண்ணீர் ஊற்று வர்த்தகர்களால் வரவேற்பளிக்கும்  நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தண்ணீரூற்று சந்தை வளாகத்திலும் முள்ளியவளை சந்தை வளாகத்திலும் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் தற்போது  தவிசாளராக கடமையாற்றி வருகின்ற சபையின் பிரதி தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.