இரட்டை சகோதரிகளின் இரு கணவர்களையும் காவுகொண்ட மின்னல் சோகத்தில் குமுழமுனைகிராமம்!

0 359


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 15.04.21 அன்று தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளார்கள்.


இவர்களில் இரட்டை சகோதரிகளின் கணவர்கள் இருவரும் அடங்குகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றும் இரட்டை சகோதரிகள் தங்கள் கணவர்கள் இருவரும் மின்னல் தாக்குதலில் ஒரோ நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.


இச்சம்பவம் குமுழமுனை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இரட்டை சகோதரிகள் பிறப்பில் இரட்டையாக இருந்தாலும் அவர்கள் வாழ்வியலில் இரட்டையாகவே எல்லாம் ஒரேதடவையில் நடைபெற்றுள்ளது.

இருவரும் கணவர்களை ஒரேநேரத்தில் இழந்துள்ளமை பெரும் சோகத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளதுடன் குமுழமுனை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் 18.04.21 இன்ற மக்களின் இறுதி வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.