விடுதலைப்புலிகள் மீளுருவாக்க முயற்சி புதுக்குடியிருப்பில் ஒருவர் கைது!

0 647


பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த குடும்பஸ்தர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.


45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரரே இன்று அதிகாலை பயற்கரவாதகுற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.