புத்தாண்டில் இடம்பெற்ற விபத்து கைகலப்பு 25 பேர் மாவட்ட மருத்துவமனையில்!

0 125

புத்தாண்டில் இடம்பெற்ற விபத்து கைகலப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 25 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதி!


முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்தாண்டு அன்று (14.04.21) அன்று விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியாசலை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


வீதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 13 பேர் வரை காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதனை விட பிரதேச ஆதார மருத்துவமனைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


கைகலப்பு சண்டைகளில் காயமடைந்த 09 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் நேற்று புத்தாண்டு அன்று கிராமங்களில் இளைஞர்களுக்கிடையில் கைகலப்புக்கள் ஏற்பட்டுள்ளன தீர்த்தக்கரை கிராமத்தில் இடம்பெற்ற கைகலப்பின் போது ஒரு பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளார்கள்.


இதேவேளை புத்தாண்டு அன்று தற்கொலைக்கு முயற்சி செய்த இருவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.14.04.21 அன்று இரவு வரை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பதிவுகளின் படி 25 பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.