ஈஸ்டர் கோப்பை பிறீமியர் லீக் கிண்ணத்தினை 2017 ஆம் ஆண்டு அணி கைப்பற்றியது!

0 47

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர்களுக்கிடையில் 04.04.21 அன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஈஸ்டர் கோப்பை பிறீமியர் லீக் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.


பாடசாலையின் பழையமாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் பாடசாலையின் வளர்ச்சி கருதியும் பிரித்தானியா,பிரான்ஸ்,கனடா நாடுகளில் உள்ள பழைய மாணவர்களின் அனுசரணையுடன் றோமன் கத்தோலிக்க வித்தயாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட 8 ஓவர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.
பழையமாணவர்கள் உள்ளடக்கிய 7 அணிகள் இதில் பங்கு பற்றியுள்ளன.


காலை தொடக்கம் சுற்றுப்போட்டிகள் தொடங்கி மாலை வேளையில் இறுதிப்போட்டிக்கு 2017 ஆண்டு பழையமாணவர் அணியும், திறந்த அணியினர் (ஓப்பிண்) அணியினரும் தெரிவாகியுள்ளார்கள்.


இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திறந்த அணியினர் (ஓப்பிண்) 6 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 38 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2017 ஆண்டு பழையமாணவர் அணியினர் 6.2 ஓவர்களில் 39 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளார்கள்.

பரிசளிப்பு நிகழ்வு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தயாலய முதல்வர் அருட்பணி றெபின்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
முல்லைத்தீவு மறைக்கோட்ட குரு முதல்வரும் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தையுமான அருட்பணி அன்ரனிப்பிள்ளைஅடிகளார்.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் க.ஜெனமேஜயந், முல்லைத்தீவு மாவட்ட திடீர் மரணவிசாரண அதிகாரியும் சமாதான நீதவானுமான அ.சற்குணராசா,ஓய்வு நிலை உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் மைக்கல் திலகராசா, உள்ளிட்ட அதீதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்கள்,கேடயங்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.