உலக வளிமண்டல திணைக்கள நாள் முல்லைத்தீவில் அனுஸ்டிப்பு-பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பிப்பு!

0 41

ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் திகதி உலக வளிமண்டலவியல் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் கிளையின் ஒருங்கமைப்பில் இன்று(23) காலை 9.40 மணிக்கு மாவட்ட செயலகத்தின் புதிய மாநாட்டு மண்டபத்தில் உலக வளிமண்டலவியல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரம் எமது காலநிலையும் அவதானமும் எனும் தொனிப்பொருளில் 2021 வளிமண்டலவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன்போது அதிதிகளின் உரையுடன் வானிலை தொடர்பான விசேட விழிப்புனர்வுடனான காட்சிப் பகிர்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் கே.டி.சுஜீவ மற்றும் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மகாவித்தியாலய உயர்தர புவியியல் பாட மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.