சாலைப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

0 36

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடந்த காலபோரின் போது புதைத்துவைக்கப்பட்ட ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


விமானப்படையினரின் தகவலுக்கு அமைய 15.03.21 அன்று விசேட அதிரடிப்படையினரால் சாலைப்பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது ஆர்.பி.ஜி.வகையான குண்டுகள் 6, 60 எம். எம். எறிகணை குண்டுகள் 4,கைக்குண்டுகள் நான்கு உள்ளிட்ட மீட்கப்பட்டுள்ளன.


மீட்கப்பட்ட வெடிபொருட்கள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து முல்லைத்தீவு பொலீசால் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.