4 இலட்சத்தி 50 ஆயிரம் பணம் கொடுக்காமல் ஏமாற்றிய பீற்றர் இளம்செழியன்!

1 1,072


தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கட்சியின் இளைஞர் அணி பிரமுகரும் சமூக செயற்பாட்டாளரும் என தன்னை அடையாளப்படு;த்திக்கொள்ளும் முல்லைத்தீவினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் என்பவர் கடந்த 24.03.2019 அன்று புதுக்குடியிருப்பு நகரில் உள்ள புத்தக கடை ஒன்றில் 4 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு இதுவரை பணம் செலுத்த வில்லை என புதுக்குடியிருப்பு பொலீஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வழக்கு இணக்க சபைக்கு விடுக்கப்பட்டுள்ளது.


இணக்க சபையினால் அழைப்பாணை அனுப்பியும் கிராம உத்தியோகத்தர் ஊடாக அறிவித்தும் எந்த ஒரு தவணைக்கும் சமூகம் தராத காரணத்தினால் இணக்கசபையினால் குறித்த பணப்பிணக்கு தீர்த்து வைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வணிக நிலை உரிமையாளர் நீதிமன்றத்தனை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


தமிழரசு கட்சியின் தனது பதவி நிலையினை சொன்னதன் காரணத்திலேயே குறித்த நபருக்கு  இவ்வளவு பெறுமியான பொருட்களை கடனாக வழங்கியுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

1 Comment
  1. T.Arjin says

    2015 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்காக எமது பிரிண்டேர்சில் பேனர், போஸ்டர் போன்ற வேலைகளை செழியன் அவர்கள் செய்தார். அதில் மிகுதி பணம் 55000/= ரூபா இதுவரையும் எமக்கு தரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.