நா.உறுப்பினர் சுரேன் றாகவன் புதுக்குடியிருபபில் பெண்களை சந்திக்கவுள்ளார்!

0 208


சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்) வன்னி தேர்தல் மாவட்டத்தின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் 14.03.21 அன்று சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.


புதுக்குடியிருப்பு பெண்கள் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கைவேலியில் அமைந்துள் சங்க மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்ப நடைபெறவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான நுண்கடன் பிரச்சனை,பெண்களின் வாழ்வாதாரம்,பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக பெண்கள் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.