30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விழா!

0 139


முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

11.03.21 அன்று காலை குருந்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் விவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றுள்ளன 

1990 ஆம் அண்டின் பின்னர் ஸ்ரீ கோணமடு பிள்ளையார் ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இம்முறையே சிவராத்திரி விழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

முள்ளியவளை,தண்ணீருற்று,குமுழமுனை கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டு சிறப்பித்துள்ளதுடன்.

சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அங்கு பொலீசாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.