வேணாவில் பகுதியில் 15 குடும்பங்களுக்கு காணியும் வீட்டுத்திட்டமும் வழங்க நடவடிக்கை!

0 98

வேணாவில்  கிராம மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிட்டியுள்ளதாகவும்   15 குடும்பங்களுக்கு காணியும் வீட்டுத்திட்டமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான காணி வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுத்த புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு தமது கிராமத்தில் இன்னும் 12 குடும்பங்கள் வரை காணிகள் வீடுகள் அற்று இருப்பதாகவும் அவர்களுக்கும் காணிகளையும் வீட்டுத்திட்டத்தையும் வழங்க  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில்  காணிகள் அற்ற மக்கள் தமக்கு வாழ்விட காணிகள்  வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்நிலையில் அவர்களுக்கான காணிகள் தொடர்ச்சியாக வழங்கப்படாத நிலையில் கடந்த வருடம் 8 மாதம் குறித்த அவர்களுடைய கிராமத்தில் இருந்த ஒரு பற்றை  காடுகளை துப்பரவு செய்து அதற்குள் குடியேற முற்பட்டபோது புதுக்குடியிருப்பு  பொலிசார் வருகை தந்து அவர்களை தடுத்து நிறுத்தியதோடு உரிய வகையில் அனுமதி பெற்று அந்த காணிகளில் குடியமருமாறு  தெரிவித்திருந்தனர்


தொடர்ச்சியாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத  நிலையில் கடந்த வருடம் 12 மாதம் குறித்த பகுதியில் காணிகலற்ற  சுமார் 15  குடும்பங்கள் வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து தொடர் போராட்டத்தில் குதித்தனர்

 தமக்கு வாழ்வதற்கான வாழ்விடம் எதுவுமில்லை எனவும் காணிகள் வழங்கப்படும் வரை  தாம் அந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்து தொடர் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்கள் காணிகளை உடனடியாக வழங்க முடியாது எனவும் அதற்கான ஒரு கால அவகாசம் தேவை எனவும் உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது எனவும்   ஐந்து மாத கால அவகாசத்திற்குள் உங்களுக்குரிய காணிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்திருந்தார்

இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன்வைத்த 15 குடும்பங்களுக்கான காணிகள் மற்றும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் வழங்குவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குறித்த காணிகளை துப்பரவு செய்யும் பணியில் குறித்த குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர்

குறித்த காணிகள் துப்பரவு  செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கான காணிகளை அளவீடு செய்து வழங்கப்படவுள்ளதோடு அவர்களுக்கான  வீட்டுத் திட்டங்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து ள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு தமது கிராமத்தில் தங்களைப் போல இன்னும் பத்து பன்னிரண்டு குடும்பங்கள் காணிகள் வீடுகள் அற்று இருக்கின்றன எனவும் அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்  கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.