முல்லைத்தீவில் இருந்து செல்லும் டிப்பர்களின் றூட்போமிட்டால் பெரும் பிரச்சனை!

0 180

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவளத்திணைக்களத்தால் கிரவல் மணல் அகழ்விற்கு வழங்கப்படும் றூட் போமிட் தொடர்பில் அரச அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல்,கிரவல் அகழ்வு தொடர்பிலும் அதற்காக கனியவளத்திணைக்களத்தால் வழங்கப்படும் றூட் போமில் வெறும் மொட்டையாக காணப்படுகின்றமை தொடர்பில் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


05.03.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிரவல் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.


மணல்,கிரவல் கொண்டுசெல்வதற்கான  வாகன வழித்தடம் றூட்போமிட்டில் போடப்படவில்லை வெறுமெனவே திருகோணமலை மன்னார் என்றுபோடப்படுவதால் பல நிர்வாக பிரச்சனைகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.பொலீசாராலும்,நீதிமன்றத்தாலும் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.


இந்த இயற்கை வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் ஒருசில காலங்களில் இல்லாமல் போய்விடும் இதனை சரியான முகாமைத்துவம் செய்து முறைப்படி கொடுப்பதும் அனுமதி வழங்கப்படும் இடங்களில் அகழ்வு நடைபெறுகின்றதா என்பதுகேள்வியாக உள்ளது.

திருகோணமலையில் இருந்து வரும் றூட்போமிட்டினை வைத்துக்கொண்டு சிலாவத்தை பகுதியில் இருந்து மணலினை எடுத்து செல்கின்றார்கள் திருகோணமலை முல்லைத்தீவு முதன்மை வீதியில் ஏறியவுடன் றூட்போமிட் சரியாக வந்துவிடும் பொலீசார் அதனை தடுக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு சட்டத்திற்குள் கையினை போட்டு விளையாடுபவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்றார்கள் தொழில் போட்டி காரணமாக மனிதத்துவம் இல்லாத மனிதர்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.